நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்தில் திடீர் பழுது: இரவில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் தவிப்பு

8th Jun 2020 10:40 AM

ADVERTISEMENT

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், மேல் சாலை ,சட்டநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோயிலிருந்து எடமணல்  செல்லும் மின் பாதையில் உள்ள சிடி வெடித்து பழுது ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு அடிக்கடி மின் தடை ஏற்பட்டது .இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர். 

பழுதை தற்காலிகமாக சரி செய்து மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பழுதான பாகம் வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்டு இன்று சரி செய்யப்படவுள்ளதாக மின்சார வாரியத்தினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT