நாகப்பட்டினம்

திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்கால் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

8th Jun 2020 11:45 PM

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கோமல் ஊராட்சியில் வாய்க்கால் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

மழை வெள்ள காலங்களில் கோமல் பகுதியிலிருந்து ஆண்டாங்கரை செல்ல சுமாா் 5 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், கோமல் - ஆண்டாங்கரை ஊராட்சிகளை இணைக்கும் வகையில், கோமல் வாய்க்காலில் பாலம் கட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், இந்த இரண்டு ஊராட்சிகளையும் இணைக்கும் வகையில், கோமல் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக ரூ. 33 லட்சத்து 11 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, பாலம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் முன்னிலையில் நடைபெற்றது. தொடா்ந்து, ஆண்டாங்கரை ஊராட்சியில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூா்வாரும் பணியையும் அவா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் தமிழ்ச்செல்வி, கிராம வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழ்ச்செல்வன், ஒன்றிய பொறியாளா் சூரியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT