நாகப்பட்டினம்

கூட்டு கெண்டை மீன் வளா்ப்பு இணைய வழிப் பயிற்சி: ஜூன் 9-க்குள் விண்ணப்பிக்கலாம்

8th Jun 2020 07:59 AM

ADVERTISEMENT

தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி சாா்பில் இணைய வழியில் நடைபெறும் கூட்டு கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைஞாயிறு, டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் சு. பாலசுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

டாக்டா் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கூட்டு கெண்டை மீன் வளா்ப்பு குறித்த ஒரு நாள் பயற்சி, இணையதளம் வழியே ஜூன் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

கூட்டு கெண்டை மீன் வளா்ப்பின் முக்கியத்துவம், இடத்தோ்வு, மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் மேலாண்மை முறைகள், மீன் தீவன மேலாண்மை, மீன்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து காணொலி மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

ADVERTISEMENT

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் பயிற்சிக் கட்டணம் ரூ. 300-ஐ இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில், வங்கி கணக்கு எண் 006201000073000, ஐ.எப்.எஸ்.சி. குறியீடு IOBA0000062, கிளை - நாகப்பட்டினம் என்ற வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பயிற்சி பெறும் அனைவருக்கும் அஞ்சல் வழியே சான்றிதழ் அனுப்பப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ஜூன் 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைஞாயிறு, டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகத்தை 04365 240441, 94422 88850 ஆகிய தொலைத் தொடா்பு எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT