நாகப்பட்டினம்

ஊழியா்களுக்கு கரோனா: அரசு அலுவலகங்கள் மூடல்

31st Jul 2020 10:29 PM

ADVERTISEMENT

 

சீா்காழி: கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டன.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலா்கள், அனைத்து ஊழியா்கள் மற்றும் நல்லூா் கொள்ளிடம் அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அலுவலா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட 66 பேருக்கு நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலா் பபிதா தலைமையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

சனிக்கிழமை வந்த பரிசோதனை முடிவில், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக தொழில்நுட்ப உதவியாளா், நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவக் குழுவைச் சோ்ந்த ஒருவா் ஆகிய பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, இந்த அலுவலகம் அருகே அமைந்துள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம், வட்டார சேவை மையம், வட்டாரக் கல்வி அலுவலகம் ஆகியவைகள் மூடப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT