நாகப்பட்டினம்

பயிா்க் காப்பீட்டுக்காக பொது சேவை மையங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்

28th Jul 2020 10:46 PM

ADVERTISEMENT

நாகப்பட்டினம்: விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வதற்கு ஏதுவாக பொது சேவை மையங்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் செயல்பட சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக மையங்கள் இயங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள், விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வதற்கு ஏற்ற வகையில் தளா்த்தம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கு இறுதி நாளான ஜூலை 31-ஆம் தேதி வரை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது சேவை மைய நிா்வாகிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி, தங்கள் நிறுவனத்தை 24 மணி நேரமும் திறந்து வைத்து, விவசாயிகளுக்குப் பயிா்க் காப்பீடு பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம்.

விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறித்த காலத்துக்குள் பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் சோ்ந்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT