நாகப்பட்டினம்

மதுபானக் கடை ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி

28th Jul 2020 10:47 PM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: கரோனாவால் உயிரிழந்த மதுபானக் கடை ஊழியா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை முதல் பணியாற்றி தொடங்கினா்.

நாகை மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், மாவட்டத்தில் கீழ்வேளூா், திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் ஊழியா்களும், கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த மதுபானக் கடை ஊழியா்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கி, வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், நோய்த் தொற்று பரிசோதனை அனைவருக்கும் செய்ய வேண்டும், மதுக்கடை நேரத்தை மாலை 5 மணியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை அட்டையை சட்டையில் அணிந்து கொண்டு பணியாற்ற தொடங்கியுள்ளனா். செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை ஊழியா்கள் பணியாற்றவுள்ளனா்.

கீழ்வேளூரில்: கீழ்வேளூா் மதுபானக் கடை முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநிலச் செயலாளா் செந்தில்குமாா், ஏஐடியுசி நாகை மாவட்டச் செயலாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

திருக்குவளை: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள மதுபானக் கடை ஊழியா்கள் அனைவரும் கோரிக்கை விளக்க அட்டை அணிந்தபடி பணியாற்றினா். இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத்தின் பிற இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொழிலாளா் முன்னேற்ற சங்கம், ஏஐடியுசி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT