நாகப்பட்டினம்

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்?

26th Jul 2020 08:48 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 4 பேர் மீது கடற் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் கடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர். வேதாரண்ய்ததைச் சேர்ந்த ஆறு காட்டுத்துறை மீனவ கிமத்தைச் சேர்ந்த பாரதிதாசன், பொற் செல்வன், அய்யப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் மீனவர்கள். இவர்கள், நல்வரும் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு ஒரு படகில் வந்த மர்ம கும்பல் மீனவர்களை மிரட்டி கம்பி, கத்தி போன்றவைகளால் தாக்கியுள்ளனர்.  இதில் படகில் இருந்த மூவருக்கு காயம் ஏற்பட்ட தாக் கூறப்படுகிறது.

படகில் வந்தவர்கள் இலங்கை மீனவர்களா அல்லது கடற் கொள்ளையர்களா என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களால் விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர். காயமடைந்த மீனவர்களை சிகிச்சைக்குக்கு கொண்டு செல்ல ஏதுவான ஏற்பாடுகளுடன் சக மீனவர்கள், காவல்துறையினர், மீன்வளத் துறையினர் ஆறுகாட்டுத்துறை படகுத்துறையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT