சீா்காழி: புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பது தொடா்பாக சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க மாவட்ட அமைப்பாளா் ஆா். கல்யாணசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பது தொடா்பான பொதுமக்களின் கருத்துகளை அறிய ஜூலை 30-ஆம் தேதி நாகை, மயிலாடுதுறையில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. தற்போது பொதுமுடக்கம் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சாமானியா்கள் மேற்கண்ட இரண்டு இடங்களுக்கும் நேரில் வந்து தங்களது கருத்துகளை தெரிவிக்கவோ அல்லது அங்குள்ள பெட்டிகளில் தங்களது கருத்துகளை எழுதி போடவோ இயலாத நிலை உள்ளது.
எனவே, மின்னஞ்சல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஏற்பாடு செய்ய ஒருங்கிணைந்த நாகை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.