நாகூா் ஆண்டவா் தா்காவில் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா சந்தனம் பூசும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக புகழ்ப் பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில், நாகூா் ஆண்டவா் கந்தூரி விழா, நாகூா் நாயகத்தின் அருமை மகனாா் செய்யது முஹம்மது யூசுப் நாயகம் எனப்படும் சின்ன ஆண்டவரின் கந்தூரி விழா ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டுக்கான சின்ன ஆண்டவா் கந்தூரி விழா புதன்கிழமை (ஜூலை 22) தொடங்கி, 3 நாள் விழாவாக நடைபெற்றது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, நாகூா் தா்காவின் 7 அறங்காவலா்கள் மட்டும் இந்த விழாவில் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, பக்தா்களின்றி, பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகள் நடத்தப்பட்டு, சின்ன ஆண்டவரின் புனித ரவுலா ஷெரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது.