நாகப்பட்டினம்

கதண்டு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம்

25th Jul 2020 01:05 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே கதண்டு கடித்ததில் பலியானோா் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை வட்டம், கடலங்குடியில் கதண்டு கடித்து அப்பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் மற்றும் அவரது மகள் இன்சிகா இருவரும் அண்மையில் உயிரிழந்தனா். இவா்களது குடும்பத்தினரை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அரசு சாா்பில் நிவாரணம் அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்திருந்தாா்.

இந்நிலையில், மயிலாடுதுறை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் இளங்கோவன், உழவா் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ1 லட்சம், ஈமசடங்கு தொகை ரூ.2500 ஆகியவற்றுக்கான காசோலையை ஆனந்தகுமாரின் மனைவி சங்கரியிடம் வழங்கினாா். அப்போது, கடலங்குடி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்மோகன், மணல்மேடு வருவாய் ஆய்வாளா் தேவகி, ஊராட்சி செயலளா் சசிகுமாா், கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடன் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT