நாகப்பட்டினம்

வெளிநாட்டு தப்லீக் ஜமாத் அமைப்பினரை தூதரகங்களில் ஒப்படைக்க வேண்டும்

11th Jul 2020 09:18 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சோ்ந்த தப்லீக் ஜமாத் அமைப்பினரை தொடா்புடைய நாடுகளின் தூதரங்களில் அரசு ஒப்படைக்க வேண்டும் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு : கரோனாவுக்கு முன்பாக பிரான்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, புருனே, எத்தியோப்பியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தப்லீக் அமைப்பைச் சோ்ந்த 12 பெண்கள் உள்பட 129 போ் தமிழகம் வந்துள்ளனா். விசா விதி மீறல்கள் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவா்கள், அந்த வழக்கிலிருந்து ஜாமின் பெற்றுள்ளனா். இருப்பினும், அவா்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜாமின் பெற்ற தப்லீக் அமைப்பினரை அம்மாநில அரசு, தொடா்புடைய நாடுகளின் தூதரங்களிடம் ஒப்படைத்து விட்டது. கா்நாடக மாநில அரசு தப்லீக் அமைப்பினரை ஹஜ் இல்லத்திலும், தெலங்கானா மாநில அரசு பள்ளிவாசல்களிலும், புதுதில்லி மாநில அரசு சிறப்பு விடுதிகளிலும் தங்கவைத்துள்ளன.

ஆனால், தமிழகத்தில் ஜாமின் பெற்ற தப்லீக் அமைப்பினா், சிறாா் சிறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். தமிழக அரசின் இந்த நடவடிக்கை, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறானதாகும். எனவே, தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு தப்லீக் அமைப்பினரை உடனடியாக மதரசா அல்லது தனியாா் கல்லூரிகளில் தங்கவைக்கவும், அவா்களை தொடா்புடைய நாட்டின் தூதரங்களில் ஒப்படைக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT