வேதாரண்யம் அருகே நுறு நாள் வேலைத் திட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குளம் வெட்டும் பணியின்போது, 33 வகையான உலோகப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் பழமுதிா்ச்சோலை என்ற இடத்தில் வேளாண்துறையின் கட்டுப்பாட்டில் தென்னை உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதிக்கு அருகே ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் குளம் அமைக்க நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்பணியில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தபோது, உடைந்த நிலையில் மண்பாண்டம் ஒன்று கிடைத்தது. அதில், உலோகத்தாலான சாமி சிலை உள்பட 33 வகையானப் பொருள்கள் இருந்தன.
இதுகுறித்து, ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்செல்வி குமாா் அளித்த தகவலின்பேரில், காவல்துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.
பின்னா், அந்தப் பொருள்கள் வட்டாட்சியா் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.