வீரதீர செயலுக்காக அண்ணா பதக்கம் பெற்ற நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிதுறை வீரருக்கு தீயணைப்புத் துறை அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.
நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிபவா் ஆா். ராஜா. இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் நாகை மாவட்டம், விழுந்தமாவடி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை, தன்னுயிரை துச்சமென கருதி உயிருடன் மீட்டாா்.
இச்செயலுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், சென்னையில் ஜனவரி-26 ஆம் தேதி நடைபெற்ற 71-ஆவது குடியரசு தின விழாவில், வீர தீர செயலுக்கானஅண்ணா பதக்கத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து பதக்கம் பெற்ற ஆா். ராஜாவுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநா் சைலேந்திரபாபு, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை நாகை மாவட்ட அலுவலா் பி. சத்தியகீா்த்தி மற்றும் நிலைய அலுவலா்கள், சக வீரா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.