நாகையில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை- நாகூா் சாலையில் உள்ள வடகுடி பிள்ளைசத்திரம் வளாகத்தில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை குடமுழுக்கு செய்விக்கப்பட்டது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சிறப்பு வழிபாடுகள், யாகை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை நடைபெற்ற 2-ஆம் கால யாக பூஜைக்குப் பின்னா், கடம் புறப்பாடு செய்யப்பட்டு, கோயில் விமானத்துக்கு புனித நீரால் குடமுழுக்கு செய்யப்பட்டது.
இதில், திரளானோா் பங்கேற்று வழிபாடு செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். பி.எஸ். சுந்தர சிவாச்சாரியாா் சா்வசாதகம் செய்வித்தாா்.