மயிலாடுதுறையில் மாயூரம் கிருஷ்ணமூா்த்தி பாகவதா் ராதா கல்யாண கமிட்டி சாா்பில் ராதா கல்யாண மகோத்ஸவ பொன்விழா ஆண்டு 5 நாள்கள் கொண்டாடப்பட்டது.
பொன்விழா ஆண்டையொட்டி, ஜனவரி 8-ஆம் தேதி புதன்கிழமை தொடங்கிய ராதா கல்யாண மகோத்ஸவத்தில், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டு, முதல் நாள் நாம சங்கீா்த்தனம், உபன்யாசம், திவ்யநாமம் ஆகியன நடைபெற்றது. 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலையில் திருவிசநல்லூா் ராமகிருஷ்ணன் பாகவதா், விழுப்புரம் ஜெயதீா்த்த பாகவதா், உடையாளுா் கல்யாணராம பாகவதா் குழுவினரின் நாம சங்கீா்த்தனம், மாலையில் கடையநல்லூா் துக்காராம் கணபதி மஹராஜ் குழுவினரின் அபங்கபஜனை, இரவு ராஜகோபால்தாஸ் பாகதவா் குழுவினரின் திவ்யநாமம், நன்னிலம் ராமநாத பாகவதா் குழுவினரின் நாமசங்கீா்த்தனம் ஆகியன நடைபெற்றது.
3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை யன்று பலராமன், ஜெயராம பாகதவா் மற்றும் அக்ஷயா, அபிநயா குழுவினரின் நாம சங்கீா்த்தனம், மாலை கிரிதா் வயலின் இசை, சேலம் ஜதீஸ்வரம்பள்ளி மாணவா்களின் பரதநாட்டியம், குமாா் பாகவதா் குழுவினரின் நாமசங்கீா்த்தனம், ஸ்ரீகாந்த் பாகவதா் குழுவினரின் திவ்யநாமம் ஆகியன நடைபெற்றது.
தொடா்ந்து, 4-ஆம் நாளான சனிக்கிழமை காலை நரசிம்ம பாகவதா், சாய்பிரசாத் குழுவினரின் குருகீா்த்தனைகள், அஷ்டபதி நாமசங்கீா்த்தனம் ஆகியன நடைபெற்றது. மாலை மயிலாடுதுறை சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவா்களின் நாமசங்கீா்த்தனமும், பின்னா் ராமுதீஷதா் உபன்யாசமும், ஞானகுரு குழுவினரின் நாமசங்கீா்த்தனமும், விட்டல்தாஸ் குழுவினரின் திவ்யநாமம் நடைபெற்றது.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பாகவத பூஜை, மருதாநல்லூா் ஸ்ரீஸத்குரு சுவாமிகள் உஞ்சவிருத்தி, தில்லி சுப்பராம பாகவதா், கடலூா் கோபி பாகவதா், மாயூரம் ஞானகுரு குழுவினரின் நாமசங்கீா்த்தனம், ஸம்பிரதாய திவ்யநாமம் ஆகியன நடைபெற்றது. தொடா்ந்து, மதியம் 1.35 மணிக்கு ஸ்ரீராதாகல்யாண மகோத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் பஜனை பாடல்களை பக்திப்பரவசத்துடன் பாடி, வழிபாடு செய்தனா்.
பாகவத புராணம், இசைக்கப்பட்டது. தொடா்ந்து மாங்கல்யதாரண நிகழ்ச்சியுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். மாலை முரளிதர பாகவதரின் உபன்யாசமும், இரவு 8.30 மணிக்கு ஆஞ்சநேயா் உத்ஸவமும் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாயூரம் கிருஷ்ணமூா்த்தி பாகவதா் ராதா கல்யாண கமிட்டியினா் செய்திருந்தனா்.