நாகப்பட்டினம்

கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல் விழா

14th Jan 2020 07:44 AM

ADVERTISEMENT

மாணவா்களிடையே சமத்துவம் மற்றும் ஒற்றுமை உணா்வை ஊக்குவிக்கும் வகையில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சா்ஐசக் நியூட்டன் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். வேளாங்கண்ணி உதவி பங்குத் தந்தை ஆண்டோ ஜேசுராஜ், அன்சாரி மருத்துவமனை இயக்குநா் டாக்டா் எம். ரஜ்வி, வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் ஆசிரம அறங்காவலா் குழுத் தலைவா் ப.உ. சண்முகம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

தமிழா்களின் தொன்மைக் கலாசாரப்படி, சூரியனுக்கு நன்றிப் பாராட்டும் வகையில் பூஜைகள் நடத்தப்பட்டு, பொங்கலிடப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாராமெடிக்கல் கல்லூரி முதல்வா் லட்சுமிகாந்த், கல்வியியல் கல்லூரி முதல்வா் ஆா். முருகதாஸ், ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் எம். மணிகண்டபிரசாத், கலை அறிவியல் கல்லூரி முதல்வா் எஸ். நிறைமதி, நிா்வாக அலுவலா் எம். குமாா், வேலைவாய்ப்பு அலுவலா் சாா்லஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பிரைம் கல்லூரியில்: கீழ்வேளூா், பிரைம் ஆா்க்கிடெக்சா் மற்றும் பிளானிங் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பிரைம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் என். கோவிந்தராஜூலு தலைமை வகித்தாா். கல்வியியல் கல்லூரி இயக்குநா் ஏ.வி. பாலு, ஆா்க்கிடெக்சா் கல்லூரி இயக்குநா் ஆா். பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி வளாகத்தில் பொங்கலிடப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக, கஸ்டோ 2020 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பிரைம் ஆா்க்கிடெக்சா் கல்லூரி முதல்வா் பரிசுத்தராஜன் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். 6 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் போட்டிகளில் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சின்மயா பள்ளியில்: நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, ஆசாரியா் ராமகிருஷ்ணானந்தா தலைமை வகித்தாா். பள்ளியின் சோ்மன் பி. ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் பொங்கலிடப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தேவூா் பள்ளியில்: தேவூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியா் மூ. ஞானசேகா் தலைமை வகித்தாா். பள்ளியின் மூத்த ஆசிரியா்கள் சு. சதீஷ்குமாா், டி. பிஸ்லா, கா. மேகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி வளாகத்தில் பொங்கலிடப்பட்டு, மாணவ, மாணவியருக்கு சா்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், வாழைப்பழம், கரும்பு ஆகியன வழங்கப்பட்டன. சாரண ஆசிரியா் த. ரவிச்சந்திரன் வரவேற்றாா். தமிழாசிரியா் ச. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா். தேசிய பசுமைப்படை ஆசிரியா் வை. செல்வகுமாா் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT