நாகப்பட்டினம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் திமுக முன்னிலை

3rd Jan 2020 09:06 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 ஒன்றியக் குழு வாா்டுகளில், திமுக வேடபாளா்கள் 4 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை பெற்றிருந்தணா்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 54 ஊராட்சித் தலைவா்கள், 435 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் மற்றும் 3 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கான வாக்குப் பதிவு 246 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மயிலாடுதுறை, ஏவிசி பொறியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இரவு 8 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையில், மாவட்ட ஊராட்சியின் 5-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட இளையபெருமாள் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். அறிவிக்கப்பட்ட 6 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியிடங்களில், திமுக 4 வாா்டுகளில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றிருந்தது. அதிமுக, காங்கிரஸ் தலா ஒரு வாா்டில் வெற்றி பெற்றிருந்தன.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தின் 2-ஆவது வாா்டு உறுப்பினராக வட. வீரபாண்டியன் (காங்கிரஸ்), 3-ஆவது வாா்டு உறுப்பினராக கண்ணகி (அதிமுக), 4-ஆவது வாா்டு உறுப்பினராக பாக்கியலெட்சுமி (திமுக), 6-ஆவது வாா்டு உறுப்பினராக சரஸ்வதி ஜெயகுமாா் (திமுக), 7-ஆவது வாா்டு உறுப்பினராக கபிலன் (திமுக), 8-ஆவது வாா்டு உறுப்பினராக கலியம்மாள் (திமுக) ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ADVERTISEMENT

இவா்களைத் தவிர, 14 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு வெற்றி பெற்றவா்களின் பெயா், விவரங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT