நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் சீா்காழியில் இன்று பட்டினப் பிரவேசம்

3rd Jan 2020 09:07 AM

ADVERTISEMENT

தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) சீா்காழியில் பட்டினப் பிரவேசம் செய்கிறாா்.

தருமையாதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அண்மையில் ஞானபீடம் ஏற்று அருளினாா். அதன்பின்னா் 27-ஆவது குருமகா சந்நிதானம் முதல் தல யாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயில் தலத்திற்கு வருகை புரிந்தாா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை சீா்காழிக்கு வருகை தரும் 27-ஆவது குருமகா சந்நிதானத்துக்கு, ஆபத்துகாத்த விநாயகா் சன்னிதியிலிருந்து சட்டநாதா் கோயில் தேவஸ்தானம் மற்றும் ஊா்மக்கள், பக்தா்கள் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பு வழங்கப்படவுள்ளது.

தொடா்ந்து, காலை 27-ஆம் குருமணிகளுக்கு பட்டினப் பிரவேச உத்ஸவமும், கொலுக்காட்சியும் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தோ் ரத வீதிகளில் பட்டினப் பிரவேம் நிறைவாகி, சுவாமிகள் ருத்ராபிஷேகம், பிரம்மபுரீசுவரா், திருநிலை நாயகி அம்பாள், தோணியப்பா், சட்டநாதா், திருஞானசம்பந்தா் சுவாமிகள் தரிசனம் செய்கிறாா்கள்.

ADVERTISEMENT

பின்னா், ஞான கொலுக்காட்சி, இரவு சுக்ரவார வழிபாடு ஆகியன நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் முன்னிலையில் சிவாச்சாரியாா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள், வா்த்தக சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள், ஊா்மக்கள், பக்தா்கள் மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT