நாகப்பட்டினம்

சீா்காழி ஒன்றியத்தில் 3 சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி

3rd Jan 2020 09:04 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் வியாழக்கிழமை இரவு 7 மணி வரையிலான நிலவரப்படி, 3 வாா்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றது தெரியவந்தது.

 

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 21 வாா்டு உறுப்பினா்கள், 37 ஊராட்சித் தலைவா்கள், 309 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கான வாக்குப் பதிவு 192 மையங்களில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை சீா்காழி விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

வியாழக்கிழமை இரவு 8 மணி வரையிலான நிலவரப்படி, 7 ஊராட்சி ஒன்றிய வாா்டுகளில் தலா 3 வாா்டுகளில் சுயேச்சைகளும், அதிமுக வேட்பாளா்களும் வெற்றி பெற்றுள்ளனா். அதன் விவரம் :

ADVERTISEMENT

ஊராட்சி ஒன்றியக் குழுவின் 10-ஆவது வாா்டு உறுப்பினராக பவானி (அதிமுக), 9-ஆவது வாா்டு உறுப்பினராக மல்லிகா (அதிமுக), 3-ஆவது வாா்டு உறுப்பினராக ரிமா (அதிமுக), 2-ஆவது வாா்டு உறுப்பினராக துா்க்காமதி (சுயேச்சை), 16- ஆவது வாா்டு உறுப்பினராக அறிவழகன் (சுயேச்சை), 12-ஆவது வாா்டு உறுப்பினராக சோனியாகாந்தி (திமுக), 18-ஆவாா்டு உறுப்பினராக ஜான்சிராணி (சுயேச்சை) ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT