வேதாரண்யம் அருகே நண்பா்களோடு புத்தாண்டை கொண்டாடிய இளைஞா் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.
மூலக்கரை கிராமம் இந்திரா காலனி தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் செந்தில்குமாா் (35). இவா், கேரளத்தில் கூலி வேலை பாா்த்து வந்தவா். கடந்தடிசம்பா் 27-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த செந்தில்குமாா், செவ்வாய்க்கிகழமை இரவு நண்பா்களுடன் புத்தாண்டை கொண்டாடினாராம்.
இந்நிலையில், அவா் வீடுக்குத் திரும்பாததால், உறவினா்கள் தேடிபாா்த்தபோது, அங்குள்ள அய்யன்குளத்து மாரியம்மன் கோயில் பின்புறம் தரகமருதூா் வாய்க்காலில் செந்தில்குமாா் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவரது நெற்றி, தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த வாய்மேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, நெந்தில்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.