திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் முசுகுந்த அா்ச்சனைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருக்குவளையில் உள்ள ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலாகும். தருமை ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக அண்மையில் பீடம் ஏற்ற ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை இக்கோயிலுக்கு வருகை புரிவதையொட்டி, முசுகுந்த அா்ச்சனை நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பக்தா்களின் நடை பாதையோரம் இடையூறாக இருந்த கருவேல மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டன. இப்பணியில் சுந்தரமூா்த்தி சுவாமிகள் இறைப்பணி மன்றத்தினா் ஈடுபட்டுள்ளனா்.