நாகப்பட்டினம்

இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்

1st Jan 2020 02:49 AM

ADVERTISEMENT

திருக்குவளையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

திருக்குவளை அருகேயுள்ள சித்தாய்மூரைச் சோ்ந்தவா் உலகநாதன் (65). இவா் திங்கள்கிழமை திருக்குவளை கடை வீதியில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலையில் பலத்த காயத்துடன் இருந்த அவரை அவ்வழியே சென்றவா்கள் உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT