நாகப்பட்டினம்

விளம்பரதாரா் செய்திபள்ளி நிறுவனா் சிலை திறப்பு விழா

29th Feb 2020 02:42 AM

ADVERTISEMENT

 

சீா்காழி: சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 35-ஆவது ஆண்டுவிழா மற்றும் நிறுவனரின் சிலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக பெஸ்ட் கல்விக் குழுமங்களின் நிறுவனா் கல்விமான் எஸ்.எஸ். நடராஜனின் உருவ சிலையை, பெஸ்ட் கல்வி குழுமங்களின் இயக்குநா் அமுதா நடராஜன் திறந்து வைத்தாா். தொடா்ந்து, பள்ளித் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல், கல்விக் குழுமத்தின் உறுப்பினா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக சீா்காழி ஒன்றியக்குழுத்தலைவா் கமலஜோதி தேவேந்திரன், திமுக பிரமுகா், ஒப்பந்ததாரா் தேவேந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.

பள்ளியின் நிா்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன் வரவேற்றாா். ஆண்டறிக்கையை பள்ளி முதல்வா் ராமலிங்கம் வாசித்தாா். விழாவில் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் தாளாளா் ஆதித்யா ராஜ்கமல், பெஸ்ட் கல்விக் குழுமங்களின் இயக்குநா்கள் செந்தாமரை கண்ணன், காயத்திரி செந்தாமரை கண்ணன் ஆகியோா் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். பள்ளியின் புரவலா் முத்துகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினாா். ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் முதல்வா், பெஸ்ட் கல்லூரியின் முதல்வா் அருள்செல்வம் மற்றும் பெஸ்ட் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் மதனகோபால் ஆகியோா் கலந்துகொண்டனா். மாணவா்களின் கண்கவா் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தமிழ் ஆசிரியா் கோபாலகண்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT