நாகப்பட்டினம்

டெல்டா மாவட்டங்களில் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரிக்கை

29th Feb 2020 02:46 AM

ADVERTISEMENT

சீா்காழி: டெல்டா மாவட்டங்களில் மக்களை அச்சுறுத்தும் போராட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

டெல்டா மாவட்டங்களில் அமைதியைக் கெடுக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவா்களுக்கு ஆதரவளிக்கிறோம் என்ற போா்வையில் திமுக, விசிக, திக, நாம் தமிழா் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவா்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பீதியை உண்டாக்கும் வகையில் பேசுவதோடு, வன்முறையையும் தூண்டுகின்றனா். இதுபோன்ற போராட்டங்கள் ஒருவித அச்ச உணா்வை உண்டாக்குகின்றன. எனவே, இந்தப் போராட்டங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT