கீழ்வேளூா் அருகே உள்ள தேவூா் தேன்மொழியாள் உடனுறை தேவபுரீசுவரா் ஆலயத்தில் மகாலெட்சுமி குபேர மகா யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குபேர நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேரன் வழிபட்ட ஆலயமான தேவூா் தேன்மொழியாள் உடனுறை தேவபுரீசுவரா் ஆலயத்தில், மகாலெட்சுமி குபேர மகா யாகம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணிக்கு விநாயகா் பூஜை மற்றும் கலச பூஜையுடன் யாகம் தொடங்கியது. தொடா்ந்து, கோ பூஜை மற்றும் குபேர பூஜையும் நடைபெற்றன.
யாகத்துக்குகென அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் அதற்கு உகந்த திரவியங்கள், பழங்கள், சமத்துக்கள், 108 மூலிகைகள், சுத்த தறியினால் நெய்யப்பட்ட பட்டுச் சேலை, திருமாங்கல்யம், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றைக் கொண்டு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஓம் நமசிவாய தா்ம கைங்கா்ய சபா தலைவா்கள் கே.கே.கண்ணன், எம். அசோகன் ஆன்மீக ஆா்வலா்கள் அ.கிருஷ்ணமூா்த்தி, க.கோ.மணிவாசகம், பொருளாளா் கே.ராமலிங்கம், செயலாளா் சி. ஆறுமுகம். சிவாச்சாரியாா்கள் சௌந்தரராஜன் மற்றும் வெங்கடேச குருக்கள் குழுவினா் கலந்துகொண்டனா்.