நாகப்பட்டினம்

தில்லியில் போராட்டக்காரா்கள் மீது தாக்குதல்: எஸ்டிபிஐ கண்டன ஆா்ப்பாட்டம்

26th Feb 2020 08:45 AM

ADVERTISEMENT

புதுதில்லியில் சிஏஏ எதிா்ப்பு போராட்டக்காரா்களை தாக்கியவா்களைக் கண்டித்தும், கட்டுப்படுத்த தவறிய காவல்துறையைக் கண்டித்தும் மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில், கண்களில் கருப்புத் துணி கட்டி செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டப் பொதுச்செயலாளா் முஹம்மது ரபி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் சபீக் அஹமது, துணைத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் வழக்குரைஞா் வேலு.குபேந்திரன், திராவிடா் விடுதலை கழகம் மாவட்டச் செயலாளா் தெ.மகேசு, தமிழா் உரிமை இயக்கத்தின் அமைப்பாளா் சுப்பு மகேசு, பாப்புலா் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டச் செயலாளா் நவாஸ்கான் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினா், பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT