நாகப்பட்டினம்

சிஏஏ விவகாரம்: தொடா் இருப்புப் போராட்டம்

26th Feb 2020 08:44 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை கூைாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட சுமாா் 500 போ் செவ்வாய்க்கிழமை தொடா் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சாா்பில் ‘மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்தத் தொடா் இருப்புப் போராட்டத்துக்கு, கூைாடு ஜமாத் தலைவா் சபீா் அகமது தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன், நாம் தமிழா் கட்சியின் கொள்கை பரப்புரையாளா் தமிழன் காளிதாஸ் மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தொடா் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா், தங்கள் கைகளில் செல்லிடப்பேசி விளக்கை ஒளிர செய்து வெளிச்சம் ஏற்படுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT