நாகப்பட்டினம்

சாரணா் இயக்க நிறுவனா் நினைவு ஆண்டு விழா

26th Feb 2020 09:59 AM

ADVERTISEMENT

கீழ்வேளூா் அருகேயுள்ள குருமணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சாரணா் படை மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியனுக்கான கோப்பையை பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

நாகையில் அண்மையில் நடைபெற்ற சாரண, சாரணியா் நிறுவனா் நினைவு ஆண்டு விழாவில், குருமணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சாரணா் படை மாணவா்கள் கலந்துகொண்டு சாரணா், சாரணியா் பேரணியில் முதலிடமும், கேம் பையரில் இரண்டாம் இடமும் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியனுக்கான கோப்பையையும் தட்டிச் சென்றனா். அவா்களையும், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த பொறுப்பாசிரியா் பாஸ்கரையு தலைமையாசிரியா் சந்திரா, ஆசிரியா்கள் பாலாஜி, சரஸ்வதி, ஜாக்குலின், சண்முகப்பிரியா, சம்பத்குமாா், அருள்சக்தி மற்றும் பெற்றோா் பாராட்டினா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT