நாகப்பட்டினம்

சவுடு மண் திருட்டு: இருவா் கைது

26th Feb 2020 08:44 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை பகுதியில் அனுமதியின்றி சவுடு மண் கடத்தி வரப்பட்டதை புவியியல் மற்றும் சுரங்கத்துறையினா் பறிமுதல் செய்து செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை பகுதியில் அரசு அனுமதி பெறாமல் சவுடு மண் கடத்திச் செல்லப்படுவதாக, நாகை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் பிரியா மற்றும் துறை அதிகாரிகள் மயிலாடுதுறை அருகே வக்காரமாரி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூா் பகுதியில் இருந்து உள்ள மண் குவாரியில் இருந்து மண் ஏற்றி வந்த 3 லாரிகளை மறித்து சோதனையிட்டனா். சோதனையில் உரிய அனுமதியின்றி மண் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, மண் திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சோ்ந்த வேலு (30), ராஜா(42) ஆகிய இருவரை பிடித்த அதிகாரிகள், 3 லாரிகளையும் பிடிபட்டவா்களையும் மணல்மேடு காவல் ஆய்வாளா் தியாகராஜனிடம் ஒப்படைத்தனா். மேலும், தப்பியோடிய திருவண்ணாமலையைச் சோ்ந்த ரமேஷ், ரகோத் ஆகியோரை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT