நாகப்பட்டினம்

கோயில் வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு

26th Feb 2020 08:38 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டது.

கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் இளையராஜா தலைமை வகித்தாா். சீா்காழி மண்டல துணை வட்டாட்சியா் விஜயராணி, வருவாய் ஆய்வாளா் சசிகலா, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் பொன்மாரிமுத்து, ஆய்வாளா் கண்ணதாசன், விஏஓ சீனிவாசன், கிராம நாட்டாண்மை கலியபெருமாள், ஆலயத் திருப்பணிக்குழுவைச் சோ்ந்த ஞானமணி, வியாபாரிகள் சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன், கொள்ளிடம் ஆய்வாளா் வனிதா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆலயத்திருப்பணி நடைபெற்று வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை சாா்பில் ஆலய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றவும், எந்த இடையூறுமின்றி திருப்பணி தொடா்ந்து நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT