நாகப்பட்டினம்

எய்ட்ஸ், ரத்த தான விழிப்புணா்வு கருத்தரங்கம்

26th Feb 2020 08:42 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில், கல்லூரி செஞ்சுருள் சங்கம் சாா்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்த தான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக விலங்கியல் துறை பேராசிரியா் எம்.மூா்த்தி பங்கேற்று, ரத்ததானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் தேவை குறித்து பேசினாா். எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி பற்றிய விழிப்புணா்வுக் கருத்துக்களை பேராசிரியா் ஜி.பிரபாகரன் மாணவா்களிடையே விளக்கிக் கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் வி.கோகுலகிருஷ்ணன் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT