நாகப்பட்டினம்

அன்னை அஜ்மத் பீவி தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

26th Feb 2020 08:43 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே மேலச்சாலையில் உள்ள அன்னை அஜ்மத் பீவி தா்கா 78-ஆவது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு, மாா்ச் 2-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது. இதில் தஞ்சை, நாகை, திருவாரூா், கடலூா், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மவுலானவின் கலிபாக்கள், சீடா்கள் பங்கேற்கின்றா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT