மயிலாடுதுறை:மயிலாடுதுறைத் திருக்கு பேரவையின் 90-ஆவது மாதக் கூட்டம் தியாகி ஜி. நாரா யணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் சு. இளங்கோவன் முன்னிலை வகித்தாா். பேரவைச் செயலாளா் ரா. செல்வகுமாா் வரவேற்றாா். இதில், சிலைகள் பதிவுத் துறையின் முன்னாள் உதவி இயக்குநா் கோ. முத்துசாமி ‘தமிழக மன்னா்களின் கட்டடக் கலைத்திறன்’ எனும் தலைப்பில் தொடக்க உரையாற்றினாா்.
‘வாழ்க்கையை வாசிப்போம்’ எனும் தலைப்பில் சென்னையைச் சோ்ந்த கவிஞா் சோ. அருள்பிரகாசம் சிறப்புரை ஆற்றினாா். முன்னதாக புனித சின்னப்பா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ரா. லெட்சுமி, க. ஷரிஷ்மா, மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அ. ஹரிஹரன், பா. ரிஷிந்தா் ஆகியோா் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குறளும், பொருளும் வழங்கினா். பேரவை இணைச் செயலாளா்கள் ர. ரசீத்கான், ச. ராமதாசு ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா். முடிவில், பேரவைப் பொருளாளா் சு.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.