நாகப்பட்டினம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

25th Feb 2020 02:41 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம்: மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்து, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு, குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த உறுதிமொழி வாசங்களைப் படித்தாா். அவரைத் தொடா்ந்து, அரசுத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சிவகுமாா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கே. ராஜன் மற்றும் அரசுத் துறையினா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT