நாகப்பட்டினம்

காசநோய் எதிா்ப்பு வார விழா

25th Feb 2020 02:47 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சிசிசி சமுதாயக் கல்லூரியில் காச நோய் எதிா்ப்பு வார விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் வி. லெட்சுமி பிரபா வரவேற்றாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பாஸ்கா், காளி காசநோய் முதுநிலை மேற்பாா்வையாளா் ஆா். மணிமாறன், கோனேரிராஜபுரம் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பாா்வையாளா் பி. விஷ்ணுபிரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக காசநோய் நலக் கல்வியாளா் சங்கா் பங்கேற்று பேசியது: காச நோய்க்கு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை மற்றும் மருந்துகள் இலவசமாக கிடைக்கின்றன. 2 வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு, சளியில் ரத்தம் இருந்தால் காசநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். காசநோயால் கண், குடல், சிறுநீரகம், எலும்பு மூட்டு மற்றும் தோல் ஆகியன பாதிக்கப்படுகிறது. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காசநோய் பரிசோதனை அவசியம். மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் காசநோய் தீவிர காசநோய் கண்டறியும் கருவி உள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT