நாகப்பட்டினம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

25th Feb 2020 02:59 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி: திருக்கடையூா் கீழவீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி அமாவாசையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அங்காளம்மனுக்கு பால், தேன், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி போன்ற வாசனைத் திரவிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னா் சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து, காளியாட்டம் நிகழ்ச்சி மற்றும் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT