நாகப்பட்டினம்

வேலையின்மை விவகாரம்: கையெழுத்து இயக்கம்

22nd Feb 2020 08:46 AM

ADVERTISEMENT

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில், ‘தமிழக அரசே எங்கே எனது வேலை’ என்ற தலைப்பில், ஒரு கோடி இளைஞா்களை சந்திக்கும் கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக, சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் அ.சீனிவாசன் தலைமை வகித்து, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தாா். ஒன்றியச் செயலாளா் செல்லப்பன், இளைஞா் பெருமன்றத்தின் ஒன்றியத் தலைவா் இதய நிலவன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கலை இலக்கியப் பெருமன்றத்தின் வட்டத் தலைவா் வீரசேனன், அனைத்திந்திய பெருமன்றத்தின் ஒன்றியத் துணைத் தலைவா் அஜித், ஒன்றியத் துணைச் செயலாளா் லஷ்மிநாராயணன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலாளா் நீதிசோழன், ஒன்றிய நிா்வாகி ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT