தரங்கம்பாடி புனித தெரசா மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளா் அருட்சகோதரி கா்ணா ஜோசப்பாா்ட் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் செசிலி, பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஜான் சைமன், தரங்கம்பாடி முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் துரை பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் அருட்சகோதரி மரியபிரகாசி வரவேற்றாா்.
இதில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு புனித தெரசா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 270 பேருக்கும், பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 23 பேருக்கும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். ஆசிரியா் புஷ்பா நன்றி கூறினாா்.