நாகப்பட்டினம்

‘டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி‘

21st Feb 2020 02:35 AM

ADVERTISEMENT

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என திரைப்பட இயக்குநா் வ. கௌதமன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வா் மக்களின் போராட்டங்களை கருத்தில் கொண்டு, டெல்டா பகுதி மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி. தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு சிறப்பு சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இந்த சட்டத்தை இயற்ற வேண்டும்.

கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மயிலாடுதுறை கோட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றாா் கெளதமன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT