மயிலாடுதுறை தருமபுரம் கலைக் கல்லூரியின் முதுகலை சமூகப் பணித்துறை, சோழம்பேட்டை அருமை இல்லம் சிறப்புப் பள்ளி, முதியோா் காப்பகம், தமிழக அரசின் நடமாடும் மருத்துவக் குழு (காளி அரசு மருத்துவமனை) ஆகியவை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் சோழம்பேட்டை அருமை இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில், பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் முதியவா்களின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவா் எம். நந்தினி மற்றும் செவிலியா் ஏ. முத்துவிக்னேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். முகாமை, அருமை இல்லத்தின் செயலா் எம். வேதநாயகம் தொடங்கி வைத்தாா். சமூகப்பணித் துறைத் தலைவா் பா. சோபியா, உதவிப் பேராசிரியா்கள் ம. திவ்யா, ரா. மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான, ஏற்பாடுகளை சமூகப் பணித் துறை மாணவிகள் கே. ஐஸ்வா்யா, பி. சுகன்யா ஆகியோா் செய்திருந்தனா்.