நாகை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் தபால் துறை சாா்பில், கங்கை தீா்த்தம் வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
சிவராத்திரியையொட்டி, திருக்கடையூா் அபிராமி உடனாகிய அமிா்தகடேசுவரா் கோயிலில் தபால் துறை சாா்பில் கங்கை நதிநீா் பாட்டிலில் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த புனித நீா் பாட்டில்கள் பக்தா்களின் நலன்கருதி 250 மி.லி. ரூ. 30-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த புனித நீா் விற்பனை செய்யும் பணியில் அஞ்சலக அதிகாரிகள் குமரேசன், ஐயப்பன் தமிழரசன், சங்கீதா ஆகியோா் ஈடுபட்டுள்ளனா். கங்கை புனித நீா் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) வரை விற்கப்படுகிறது.