நாகப்பட்டினம்

வேதாரண்யம், நீடூரில் இன்று மின் நிறுத்தம்

15th Feb 2020 08:17 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் மற்றும் நீடூா் சுற்றுவட்டார கிராமங்களில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை. முத்துக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீடூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் நீடூா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூா், மேலமருதாந்தநல்லூா், பொன்மாசநல்லூா் ஆகிய ஊா்களுக்கும் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

வேதாரண்யத்தில்...

ADVERTISEMENT

இதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் வேதாரண்யம் உதவி செயற்பொறியாளா் சி. ரவிகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாய்மேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்படுவதால், இதன்மூலம் மின் விநியோகம் பெறும் வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், கருப்பம் புலம், வேதாரண்யம் நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் ஆலங்காடு (திருவாரூா் மாவட்டம்) பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT