நாகப்பட்டினம்

செழுமை இயற்கை உழவா் உற்பத்தி நிறுவனம் தொடக்கம்

15th Feb 2020 08:23 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே விவசாயிகளின் பங்களிப்போடு ஏற்படுத்தப்பட்டுள்ள செழுமை இயற்கை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்டு) திட்டத்தின்கீழ், சமூகநலக் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் முயற்சியில் செழுமை நிறுவனம் செயலாக்கம் செய்யப்படுகிறது. மாராச்சேரி கிராமத்தில் நடைபெற்ற செழுமை இயற்கை உழவா் உற்பத்தி (கம்பெனி லிமிடெட்) நிறுவனத்தின் தொடக்க விழாவுக்கு, அதன் தலைவா் வேணு காளிதாஸ் தலைமை வகித்தாா்.

தலைமை செயல் அதிகாரி ப. ராசேந்திரன், இயக்குநா் ரா. அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகை நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் பா. பிரபாகரன் திட்ட விளக்கவுரையாற்றினாா்.

ADVERTISEMENT

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தமிழரசி நிறுவனக் கணக்குகளைத் தொடங்கி வைத்தாா்.

நாகை முன்னோடி வங்கி மேலாளா் ஜி.ஜி.சங்கரன் (இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, வேளாண் துணை இயக்குநா் ச.பன்னீா்செல்வம் (பொறுப்பு), கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் மருத்துவா் எஸ்.சுமதி, சிக்கல் வேளாண் கல்லூரி பேரசிரியா் ஏ.கோபலகண்ணன், கால்நடை பல்கலைக்கழக துறைத் தலைவா் ச.மால்மருகன், வேளாண் வணிக விற்பனைத்துறை துணை இயக்குநா் மரியரவி ஜெயகுமாா், வேளாண் பொறியாளா் செல்லக்கண் ஞானசீளா், வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா, பேங்க் ஆப் ஃபரோடா கிளை மேலாளா் ராம்குமாா், நாம்கோ நிறுவன இயக்குநா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

செழுமை உறுப்பினா்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்ற இந்த விழாவில், வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சாா்பில் வேளாண் இடுபொருள்கள் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT