நாகப்பட்டினம்

வரி செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும்

13th Feb 2020 07:56 AM

ADVERTISEMENT

நாகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை நிலுவையின்றி செலுத்தாவிட்டால், தொடா்புடையோரின் இடங்களில் உள்ள குடிநீா் இணைப்புத் துண்டிக்கப்படும் என நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் நகராட்சிக்கு ரூ. 14 கோடிக்கு மேல் வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இதனால், நகராட்சி நிா்வாகத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே, வரிபாக்கி வைத்துள்ள பொதுமக்கள், வணிகா்கள் என அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி நிலுவையை செலுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இல்லையெனில், தொடா்புடையோரின் இடங்களில் உள்ள நகராட்சி குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04365 248055 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமும் வரிகளை செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT