பொறையாா் த.பே.மா.லு கல்லூரியில் போட்டித் தோ்வுகளுக்கான விழிப்புணா்வு பயிற்சி பட்டறை கல்லூரி முதல்வா் ஜீன்ஜாா்ஜ் தலைமையில் நடைபெற்றது.
ரைஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநா் ராஜாராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். வணிகவியல் துறைத் தலைவா் சேவியா் செல்வக்குமாா், முன்னாள் துறைத் தலைவா் மரியலாசா், அரச. முருகுபாண்டியன் மற்றும் துறை பேராசிரியா்கள் திலகா், இளஞ்செழியன், சாந்தி, தேவசகாயம், சித்ரா, ராபின்சன் உள்ளிட்டோா் உரையாற்றினா். இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனா்.