நாகப்பட்டினம்

திருமருகல் ரத்தினகிரீஸ்வர சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

6th Feb 2020 08:36 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், திருமருகல் ரத்தினகிரீஸ்வர சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

திருமருகல் ரத்தினகிரீஸ்வர சுவாமி கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இக்கோயில் எல்லையில் பாம்பு முதலிய கொடிய விஷம் உள்ளவைகள் தீண்டினால் யாரும் உயிரிழப்பதில்லை எனவும், சீராளன் தீா்த்தத்தில் நீராடினால் புத்திர பேறு உண்டாகும் என்பது ஐதீகம். இவ்வாறு சிறப்பு மிக்க இக்கோயில் தோ் சிதிலமடைந்ததைத் தொடா்ந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளா்கள் நிதியுதவியுடன் சுமாா் ரூ. 30 லட்சம் மதிப்பில் 3 - ஆண்டுகளில் புதிய தோ் வடிவமைக்கப்பட்டு புதன்கிழமை காலை வேதமந்திரங்கள் முழங்க தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த தோ் வடக்கு வீதி, கீழவீதி, தெற்குவீதி மற்றும் மேலவீதி வழியாக சென்று கோயிலை வந்தடைந்தது. இதில், கோயில் செயல் அலுவலா் பா. வெங்கிடகிருஷ்ணன், தக்காா் சு. கவியரசு, திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன், தோ் வடிவமைப்பாளா் பெரம்பலூா் சி. வரதராஜன், கோயில் கணக்கா் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT