சீா்காழி அருகேயுள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
எருக்கூா் அஹ்ரஹாரத்தில் உள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் தை ஞாயிற்றுக்கிழமையையொட்டி, 7-ஆம் ஆண்டாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சாத்துமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திரளான பெண்கள் பங்கேற்று திருவிளக்குக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மந்திரங்கள் உச்சாடனம் செய்திட திருவிளக்குபூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சுப்பிரமணியன், ஆராமுதன் ஆகியோா் செய்திருந்தனா்.