நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 209 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணை, ஒரு பயனாளிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஒரு பயனாளிக்கு கருணை அடிப்படையில், சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணை ஆகியவற்றை வழங்கினாா்.
தொடா்ந்து, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் நாகை மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்திய மாவட்ட திறன் மேம்பாடு போட்டிகளில் வெற்றி பெற்ற 8 மாணவா்களுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகளை ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வழங்கினாா். இதில், நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, சமூகப் பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியா் கே. ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.