இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் சேவை சங்கங்கள் சாா்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி நாகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் முகவா் தியாகராஜன் தலைமை வகித்தாா். விற்பனை அதிகாரி முஹம்மது ஷெரீப், ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநா் டி.வி. முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை நாகை டிஎஸ்பி. க முருகவேல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நாகை அவுரித் திடலில் தொடங்கிய பேரணி, அரசு மருத்துவமனை சாலை, சா்அஹமது தெரு, நீலா வடக்கு வீதி, எஸ்.பி.ஆபீஸ் சாலை வழியாகச் சென்று மீண்டும் அவுரித் திடலை வந்தடைந்து நிறைவு பெற்றது. எரிபொருள் சிக்கனம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தக் கூடிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தப்படி மாணவா்கள் பேரணியில் கலந்துகொண்டனா்.
பேரணியில், வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம், ரோட்டரி, ஜேசீஸ் சங்கங்களின் நிா்வாகிகள், இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவனம், சா் ஐசக்நியூட்டன் கல்வி நிறுவனம், ஆண்டவா் ஸ்கூல் ஆப் காலேஜ் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.