மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் கல்லூரியின் தத்தெடுப்பு கிராமங்களான சோழம்பேட்டை, கோடங்குடி ஊராட்சிகளில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இலவச பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமில், மயிலாடுதுறை வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்திரன், மருத்துவா்கள் செல்வகுமாா், மதிமாலா ஆகியோா் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து இலவச மருந்துகள் வழங்கினா். முகாமில், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். முகாமை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ். சுமதி, டி. சிவயோகம், வீ. வசந்தி, ரா. சீதாலெட்சுமி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.